ஓய்வு பெற்ற அதிபர் மாத்தளை தைப்தீன் காலமானார்
(முஹம்மட் இக்பால்)
ஓய்வுபெற்ற அதிபர் தேசமான்ய எம்.ஐ. தைப்தீன் இன்று திங்கட்கிழமை மாலை கண்டி வைத்தியசாலையில் காலமானார்.
இவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய, ஊடக இணைப்பாளர்களில் ஒருவரான ரி.எம். சவாஹிரின் தந்தையாவார்.
காலம் சென்ற ஓய்வு பெற்ற அதிபர் தைப்தீன், மு.கா. ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபுடன் இணைந்து கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்ததோடு, 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டார்.
இவர், வடமத்திய மாகாணத்தின் தமிழ் மொழிமூல முதல் தர பட்டதாரியாவார். மாத்தளை சாஹிரா தேசிய பாடசாலை, உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை, அக்குரணை அஸ்ஹர் தேசிய பாடசாலை, அ/உந்துருவ கட்டுக் கொளியாவை முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் அ/கணேஸ்வல்பொல மு.ம.வி, ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
கெக்கிராவ கஹட்டஸ்திலிய தொலைக்கல்வி போதனா ஆசிரியராகவும், வடமத்திய மாகான உயர்தர புவியியல் ஆலோசகராகவும் இவர் கடமையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..
ஜனாஸா நல்லடக்கம் நாளை செவ்வாய்கிழமை காலை பத்து மணிக்கு, மாத்தளை ரஹ்மியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்
மகன் T.M. சவாஹிர்
மாத்தளை
0772975602