விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது

🕔 June 19, 2017
ந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் சுமார்  35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் பயணம் செய்த பெண்ணொருவர் குழந்தையொன்றினைப் பிரசவித்துள்ளார்.

சஊதி அரேபியாவின் தமாமில் இருந்து இந்தியாவின் கொச்சி நோக்கி, நேற்று ஞாயிற்றுக்கிழமை பயணித்துக் கொண்டிருந்த போதே, இந்தப் பிரசவம் நடந்துள்ளது.

162 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தில் பயணம் செய்த மேற்படி பெண்ணுக்கு, எதிர்பாராதவிதமாக முன்கூட்டிய பிரசவ வலி ஏற்பட்டது. அதனால் அந்த விமானம் மும்பையில் தரையிறங்க நேர்ந்தது.

இதன்போது, விமானப் பணியாளர்கள், பயணிகள் மற்றும் மருத்துவ மாது ஒருவர் இணைந்து அப்பெண்ணுக்கு சிகிச்சைகளை வழங்கினர்.

இந்த நிலையில், சுமார்  35,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, அப்பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தையொன்று பிறந்தது. விமானம் தரையிறங்கியதும் தாயும் குழந்தையும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் பத்திரமாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த குழந்தை – தனது  வாழ்நாள் முழுவதும் ஜெட் எயார்வேஸ் விமானத்தில் இலவசமாகப் பயணிக்கலாம் என, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்