ஞானசாரரை எங்களுக்கு எதிராக, மஹிந்த பயன்படுத்துகின்றார்: சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

🕔 June 19, 2017

ஞானசார தேரரைப் பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமய கட்சியை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்றார் என்று, அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

ஞானசார தேரரை  தான் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் ​இல்லை எனவும் அவர் இதன்போது சொன்னார்.

இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் குழுவினர், தங்களைப் பற்றி பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் அமைச்சர் சம்பிக தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்