
எகிப்திய தலைநகரம் கய்ரோவிலுள்ள இத்தாலிய தூதரகத்தினை இலக்கு வைத்து, இன்று சனிக்கிழமை காலை, கார் குண்டுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளதுடன், 05 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் எகிப்தில் நடைபெற்ற கார் குண்டுத் தாக்குதலொன்றில், எகிப்திய அரச வழங்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதே மாதம், பொலிஸ் நிலையமொன்றினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மற்றுமொரு கார் குண்டுத் தாக்குதலில் 03 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர்.
எகிப்திய ராணுவம், அங்குள்ள இஸ்லாமிய தீவிதவாதிகளுடன் சண்டையிட்டு வரும் நிலையிலே, இவ்வாறான தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன.
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும், எகிப்திய தீவிரவாதிகளால் – ஆகக்குறைந்தது, 600 பொலிஸாரும், படையினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 




