எரிவாயு, அரிசியின் விலை குறைகிறது

🕔 July 11, 2015

Gas cylinder - 01Red rice - 01மையல் எரிவாயுவின் விலை, 100 ரூபாவால் குறைக்கப்படுமென, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெறும், ஐ.தே.கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார்.

இதற்கிணங்க, இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு போத்தலின் விலை, 100 ரூபாவால் குறையவுள்ளது.

மேலும், 01 கிலோகிராம் சிவப்பு அரசியின் விலை 60 ரூபாவாக குறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஒரு கிலோ சம்பா அரிசி 69 ரூபாவுக்கும், ஒரு கிலோ நாடு அரிசி 60 ரூபாவுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் விற்பனையாகவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்