தலைப்புச் செய்திகள்

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு, 05 லட்சம் ரூபாய் அபராதம்

ரத்தப் பரிசோதனைக்கு (FBC) அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விடவும் கூடுதலாக அறவிட்ட ஒரு தனியார் வைத்தியசாலைக்கு, வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எண் 67-இன் கீழ், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 14 அன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு இதோட பரிசோதனையின் போது, வவுனியாவிலுள்ள வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள அந்த தனியார் வைத்தியசாலை, ஒரு FBC இரத்தப் பரிசோதனைக்கு – அரசு நிர்ணயித்த 400 ரூபாயை தாண்டி 550 ரூபாயை விட அதிகமாக வசூலித்தமை கண்டறியப்பட்டது. 

இந்த வழக்கு நேற்றூ (28) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அங்கு, முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், அந்த வைத்தியசாலைக்கு ரூ. 05 லட்சம் அபராதம் விதித்தது.

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணங்களுக்கு மேல் வசூலிக்கும் தனியார் வைத்தியசாலைகள் அல்லது வைத்திய ஆய்வகங்கள் குறித்து, அலுவலக நேரங்களில் 1977 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு முறைப்பாடு வழங்குமாறு நுகர்வோர் அதிகார சபை பொதுமக்களை வேண்டிக் கொள்கிறது.