தலைப்புச் செய்திகள்

விண்ணப்பத்தை வாபஸ் பெறுவதற்காக, லஞ்சம் பெற்றவர்கள் கைது

பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு 2027 ஆம் ஆண்டுக்கான உணவுப் பொருட்கள் வழங்குவதற்குரிய ஒப்பந்தம் தொடர்பாக ரூ. 2 மில்லியன் லஞ்சம் கோரியதாகவும், பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு – கம்பளையில் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.

சந்தேக நபர்கள் முதலில், தங்களது தந்தை மற்றும் மாமாவின் பெயர்களில் ஒப்பந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்ப்பதற்காக, முறைப்பாட்டாளரிடம் ரூ. 3 மில்லியன் லஞ்சம் கோரியுள்ளனர். ஏனெனில், அவ்வாறு செய்வது போட்டியை உருவாக்கியிருக்கும்.

பின்னர், இந்தக் கோரிக்கை ரூ. 2.5 மில்லியனாகவும், இறுதியாக ரூ. 02 மில்லியனாகவும் குறைக்கப்பட்டு வழங்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள், கம்பளையில் வசிக்கும் தொழிலதிபரான அருணகிரி நாடார் லோகேந்திரன் மற்றும் லோகேந்திரன் சிவராஜி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று காலை (27) கம்பளை அஞ்சல் அலுவலக வாகன நிறுத்துமிடத்திற்கு அருகே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.