
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் – பதுளை மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

பண்டாரவளை வட்டச்சந்திக்கு அருகே நடந்த ஒரு வாக்குவாதத்தின் போது, முறையற்ற வகையில் தடுத்து வைத்தல், உடல்ரீதியான காயத்தை ஏற்படுத்தும் தாக்குதல், மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சமிந்த விஜேசிறி குற்றவாளி என மேல் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
2019-ஆம் ஆண்டில், ஒரு பொலிஸ் ஜீப், நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை முந்திச் சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் அடிப்படையில், இந்த இந்த சம்பவம் நடந்தது. மோதல் முற்றியதால், பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும், அச்சுறுத்தப்பட்டதாகவும் அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
விசாரணையைத் தொடர்ந்து, பதுளை மேல் நீதிமன்றம் விஜேசிறியைக் குற்றவாளி எனக் கண்டறிந்து, அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.


