
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான சர்ச்சைக்குரிய முன்மொழிவுக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு சட்டத்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த முன்மொழிவு இப்போது அங்கீகாரத்துக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
முன்மொழியப்பட்ட இந்த மாற்றத்திற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படுவதால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.
இந்தத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அரசாங்கம் தற்போது கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


