தலைப்புச் செய்திகள்

கோட்டாவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (30) அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, ஓகஸ்ட் 12 ஆம் திகதி வரை, அவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரச நிறுவனங்களிடமிருந்து, ஊதியம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையில், சுகீஸ்வர பண்டாரவை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் ஜூன் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.