தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஹை, முதுமாணி பட்டம் பெற்றார்

– றிசாத் ஏ காதர் –

வைத்திய நிர்வாகத் துறையில், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல். அப்துல் ஹை, முத்துமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தனது வைத்தி நிர்வாகத்துறைக்கான முதுமாணி கற்கையை மேற்கொண்ட டொக்டர் அப்துல் ஹை கடந்த 09,10ஆம் திகதிகளில் இடம்பெற்ற 27வது பட்டமளிப்பு விழாவில் தனக்கான பட்டத்தை பெற்றிருந்தார்.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றும் இவர், திருக்கோவில் ஆயுர்வேத வைத்தியசாலையில் வைத்திய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி இருந்தார்.

கொவிட்-19 காலப்பகுதியில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை, இடைத்தங்கல் நிலையமாக செயற்பட்ட தருணத்தில், அதன் நிர்வாக நடவடிக்கைக்கு பொறுப்பான வைத்தியராக டொக்டர் அப்துல் ஹை நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் சர்வதேச அளவில் அவ்வப்போது இடம்பெறும் செயலமர்வுகள், பயிற்சிநெறிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

டொக்டர் ஹை – யுனானி மருத்துவ பட்டப்படிப்பினை கொழும்பு பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தார்.