
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்கவை மத்திய குற்றப் புலனாய்வு பணியகம் கைது செய்துள்ளனர்.
மதுபான விற்பனை உரிமம் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 27.5 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், மதுபான விற்பனை உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, 2024-ஆம் ஆண்டில் ஒரு முறைப்பாட்டாளரிடமிருந்து ரூ. 27.5 மில்லியனைப் பெற்றுக்கொண்டு, ஏமாற்றி விட்டதாக – பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


