தலைப்புச் செய்திகள்

கத்தார் நாட்டின் மறைந்த அமீருக்கு, றிஷாட் பதியுதீன் இரங்கல் தெரிவிப்பு

த்தார் நாட்டின் முன்னாள் அரசரும், ‘தந்தை அமீர்’ என அழைக்கப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவையொட்டி, இலங்கையிலுள்ள கட்டார் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபக் குறிப்பேட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கையொப்பமிட்டு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இதன்போது, தந்தை அமீரின் ஆட்சிக் காலத்தில் இலங்கை–கத்தார் இருதரப்பு உறவுகளின் ஊடாக, இலங்கைக்குக் கிடைக்கப்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவர் வழங்கிய பல்வேறு ஒத்துழைப்புக்களையும் றிஷாட் பதியுதீன் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

அவர் இது தொடர்பில் இலங்கைக்கான கட்டார் நாட்டின் தூதுவரிடமும் அனுதாபங்களை தெரிவித்தார்.

1995ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, கத்தாரை ஆட்சி செய்த ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, கத்தாரின் வளர்ச்சி மற்றும் உலகளாவிய முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய தலைவராக விளங்கியமையும் குறிப்பிடத்தக்கது.