தலைப்புச் செய்திகள்

மத்திய மாகாண ஆளுநர் ராஜிநாமா

த்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு, ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் அபயகோன், தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

இருப்பினும், ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படாததால், இந்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மஞ்சுல மதஹபோலாவின் ஓய்வைத் தொடர்ந்து, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் வெற்றிடமாக உள்ளது.

நிர்வாகப் பணிகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, இஷான் விஜேதிலக்கவை -ஆளுநரின் பதில் செயலாளராக மத்திய மாகாண பொது சேவை ஆணைக்குழு நியமித்துள்ளது.