தலைப்புச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரணை செய்ய, குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஐந்து (05) மற்றும் ஆறாம் (06) ஙதிகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (07) பிற்பகல் இந்த குழுவை நியமித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் பிரியந்த பெனாண்டோவின் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த விசாரணைக்குழுவின் செயலாளர்/அழைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கே.எல்.டீ. அசேல நியமிக்கப்பட்டுள்ளார்.