தலைப்புச் செய்திகள்

கெப் வாகனத்தில் ரயில் மோதியதில் இருவர் மரணம்

பயாகல ரயில் கடவையில் கடற்கரைப் பாதையில் பயணித்த ரயில் ஒன்று, கெப் ரக வண்டியுடன் இன்று (22) காலை மோதியதில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் – சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு ஆண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தின் காரணமாக, இன்று காலை கடற்கரைப் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.

இருப்பினும், ரயில் சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளன என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.