
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கவை, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு – கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச நிதியை தனிப்பிட்ட நடவடிக்கைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இன்று (22) அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியது.

2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்குச் செல்வதற்காக, அரச பணத்தை பயன்படுத்தினார் என, ரணில் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொது சொத்துச் சட்டத்தின் பிரிவு 5(1) மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 386 மற்றும் 388 இன் கீழ் குற்றங்களைப் புரிந்ததாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்பான செய்தி: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது


