தலைப்புச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

அரசாங்க நிதிமூலம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (22) காலை – குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தார்.

தனது ஆட்சிக் காலத்தில் அரச செலவில் லண்டன் சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க, அந்தச் செலவில் அதில் தனியார் நிகழ்வுகளிலும் பங்கேற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பயணத்திற்கு சுமார் 16.9 மில்லியன் ரூபாய் செலவாகியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி – நீதிமன்றில் ஆஜர்செய்யப்படுவார் என செய்திகள் தெரிவிக்கின்றன.