தலைப்புச் செய்திகள்

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

நாற்பத்து மூன்று வயதுடைய முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

வாக்குவாதத்தின் பின்னர் கூரிய ஆயுதத்தால் ஒருவரை குத்தி கொலை செய்ததாக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

மேற்படி சந்தேக நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் இந்த தீர்ப்பை வழங்கினார்.

மார்ச் 2, 2010 அன்று களனியில் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மேற்படி நபருக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கு நீண்ட விசாரணையின் பின்னர் முடிவுக்கு வந்தது.