தலைப்புச் செய்திகள்

வரி குறைப்புக்காக அமெரிக்காவுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை: ஜனாதிபதி அனுர

லங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது, அந்த நாடு விதித்த தீர்வை வரியை 20% ஆகக் குறைத்தமை தொடர்பில், எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

வரி வீதத்தைக் மேலும் குறைக்க முயற்சிப்பது குறித்து அமெரிக்காவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், வாகன இறக்குமதி மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளையும் ஜனாதிபதி மறுத்தார். இறக்குமதி கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.

எதிர்காலத்தில் உடனடி வரி அதிகரிப்பு இருக்காது என்றும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா 30 வீத தீர்வை வரியை ஏற்கனவே விதித்திருந்த நிலையில், அதனை 20 வீதமாக ஆகக் குறைத்துள்ளது.

இந்த வரி விதிப்பு இன்று (ஓகஸ்ட் 07) தொடக்கம் அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இந்திவாவுக்கு ஏற்றுமதி வரியை 25 வீதமான அறிவித்திருந்த அமெரிக்கா, தற்போது அதனை 50 வீதமாக உயர்த்தியுள்ளது.