தலைப்புச் செய்திகள்

440 கிராமுடன் பிடிபட்டவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், 550 கிராமுடன் மற்றொருவர் கைது

அரை கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருளுடன், கனேமுல்லவைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் நேற்று (06) சீதுவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் காரில் பயணித்தபோது கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து ஒரு கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே 440 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேக நபர் வழங்கய தகவல்களின் அடிப்படையில் – மேற்படி நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருக்கு வெளிநாட்டிலிருந்து செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.