
கானா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா – நேற்று (06) புதன்கிழமை ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
இதன்போது, சுற்றாடல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முகமது உள்ளிட்ட நால்வர் மற்றும் விமானப்படைவினர் மூவரும் பலியாகினர்.

பாதுகாப்பு அமைச்சர் போமா, சுற்றாடல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா மற்றும் பலர் கொல்லப்பட்ட இந்த விபத்து – ஒரு தேசிய சோகம் என்று, ஜனாதிபதி ஜோன் மஹாமாவின் தலைமைத் தளபதி ஜூலியஸ் டெப்ரா, ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
விபத்துக்கு என்ன காரணம் என்பதற்கான விளக்கத்தை, உடனடியாக அதிகாரிகள் வழங்கவில்லை.
முன்னதாக, Z9 விமானப்படை ஹெலிகாப்டருடன் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கானாவின் ஆயுதப்படைகள் தெரிவித்திருந்தன.
மஹாமா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஜனவரி மாதம் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றுவதற்காக, முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சரான போமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.



