
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகளின் படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகள் வீழ்ச்சியைக் காண்பிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குளோடு ஒப்பிடுகையில் இந்த வீழ்ச்சியைக் காண முடிகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் 5634915 (42.31 வீதம்) வாக்குளை தேசிய மக்கள் சக்தி பெற்றது. பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 6863186 (61.56 வீதம்) வாக்குளை அந்தக் கட்சி பெற்றது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 4503930 (43.26 வீதம்) வாக்குளையே அந்தக் கட்சி நாடு முழுவதும் பெற்றுள்ளது.
அதன்படி இறுதியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் 23 லட்சத்து 59 ஆயிரத்து 256 வாக்குகளை அந்தக் கட்சி இழந்துள்ளது. இது 18.3 வீதமான வாக்குச் சரிவாகும்.



