தலைப்புச் செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு நாடு முழுவதும் 3927 ஆசனங்கள்

உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 4,503,930 வாக்குகளையும் (43.26%) பெற்றுள்ளது. அதற்கமைய நாடு முழுவதும் 3,927 ஆசனங்களை அந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது.

23 மாநகர சபைகள், 26 நகர சபைகள் மற்றும் 217 பிரதேச சபைகள் உட்பட 266 உள்ளூராட்சி மன்றங்களில் அந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 வாக்குகளையும் (21.69%) மற்றும் 1,767 இடங்களையும் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 13 சபைகளில் அந்தக் கட்சி முன்னிலை வகிக்கின்றது.

பொதுஜன பெரமுன 954,517 வாக்குகளுடன் (9.17%) 742 இடங்களைப் பெற்றதுள்ளது. ஆனாலும் எந்தவொரு சபையிலும் அந்தக் கட்சி முன்னிலையில் இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 488,406 வாக்குகளையும் (4.69%) 381 ஆசனங்களையும் பெற்றதுள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சி 377 ஆசனங்களைப் பெற்று 37 சபைகளில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 116 ஆசனங்களைப் பெற்று 5 சபைகளில் முன்னிலை வகிக்கிறது.