தலைப்புச் செய்திகள்

உழைக்கும் போது செலுத்தும் வரிக்கான வருமானத் தொகை அதிகரிப்பு: நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 2028 ஆம் ஆண்டளவில் 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கம் என – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (18) விசேட உரையாற்றிய ஜனாதிபதி, 2028ஆம் ஆண்டிலும் தமது அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என்றும் கூறினார்.

2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட நிலைமை – மீண்டும் ஏற்படாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதேவேளை, உழைக்கும் போது செலுத்தும் வரிக்கான வருமானத் தொகையை, 01 லட்சம் ரூபாயிலிருந்து 01 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையில் உயர்த்தியுள்ளதாகவும், ஜனாதிபதி கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை அடுத்து, இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் விவரித்தார்.

இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையில், ஜனாதிபதி இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.