
தரமற்ற மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (11) பிணைியில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு வழஙகியது.
தரமற்ற மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் கடந்த பெப்ரவரி மாதம் ஆஜர் செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்லவை விளக்க மறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன் பின்னர் தன்னை பிணையில் விடுவிக்குமாறு பல தடவை கெஹலிய ரம்புக்வல்லை கோரிக்கைகளை நீதிமன்றங்களில் முன்வைத்திருந்த போதும், அவருக்கு பிணை கிடைத்திராத நிலையில் – இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்பான செய்தி: விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி



