தலைப்புச் செய்திகள்

10 மில்லியனுக்கும் அதிக வாக்காளர் அட்டைகள் விநியோகம்

ஜனாதிபதித் தேர்தலுக்குரிய 10 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக – பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் நாட்களில் விநியோகிக்கப்படும் எனக் கூறியுள்ள அவர்; எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டை விநியோகத்தை நிறைவு செய்வதற்கு தபால் திணைக்களம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய திகதிக்குள் வாக்காளர் எவரும் – தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெறவில்லையென்றால், அவர்கள் தமது தேசிய அடையாள அட்டையுடன் தங்களின் பிரதேச தபால் நிலையத்திற்குச் சென்று, தம்முடைய அடையாளத்தை நிரூபித்து, தமது வாக்காளர் அட்டையினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.