தலைப்புச் செய்திகள்

அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு கவனம்

அமைச்சரவையினால் அண்மையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு தீவிர கவனத்தைச் செலுத்தியுள்ளது. அவற்றில் சில தீர்மானங்கள் ஒரு வேட்பாளரின் தெளிவான ஒப்புதல்களாக கருதப்படுகின்றன என ஆணைக்கு குறிப்பிட்டுள்ளது.

அமைச்சரவையின் எந்தவொரு தீர்மானத்தையும் நிறுத்துவதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். சமன் ரத்நாயக்க கூறியுள்ளார்.

“இருப்பினும், சில முடிவுகளை ஒத்திவைக்க பரிந்துரைத்துள்ளதோடு, அமைச்சரவையால் வழங்கப்பட்ட சமீபத்திய அங்கிகாரம் தொடர்பான தனது கவலைகளையும் ஆணைக்குழு பகிர்ந்து கொண்டது.

உதாரணமாக, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபாய் செப்டம்பர் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதனை ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு அமுல்படுத்துமாறு ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியது” எனவும் நத்நாயக்க கூறினார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க; “அண்மைய அமைச்சரவை அங்கிகாரங்கள் – ஒரு வேட்பாளரை ஊக்குவிப்பவையாக கருதப்படுகின்ற” என்று கண்டனம் தெரிவித்தார்.