
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை கையளிக்கும் கால அவகாசம் இன்று (12) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில், பிற்பகல் 1.30 மணி வரை ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.
இதன்படி, மொத்தம் 09 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 02 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை கையளித்திருந்தன.
பின்வரும் கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன:
1. ஜனசேத பெரமுன
2. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
3. ஐக்கிய மக்கள் சக்தி
4. பொதுஜன எக்சத் பெரமுன
5. மக்கள் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு
6. இலங்கை கம்யூனிஸ் கட்சி
7. தேசிய மக்கள் சக்தி
8. தேசிய மக்கள் கட்சி (ஜாதிக ஜனதா பக்ஷய)
9. தேவனா பரபுரா கட்சி
எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்கள் – இம்மாதம் 09 முதல் 12ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.



