ஒன்றிணைந்த எதிரணியுடன் சுதந்திரக் கட்சி இணைந்தால், தனித்து ஆட்சியமைப்போம்: ஜனாதிபதியிடம் ஐ.தே.கட்சி தெரிவிப்பு

🕔 November 28, 2017

ணில் விக்ரமசிங்கவின் செய்திகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சிக்கல்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் 20915ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு இணங்க, 2025ஆம் ஆண்டு வரை, தற்போதைய அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கு பிரதமர் விரும்புகின்றார் எனும் தகவலை, இதன்போது அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியிருந்தார் எனவும் அறிய முடிகிறது.

இதன்போது ஜனாதிபதி மீது தங்களுக்குள்ள நம்பிக்கையினை அமைச்சர் மங்கள வெளிப்படுத்தியிருந்தார். ஆயினும், சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்த எதிரணியும் இணையுமானால், அரசாங்கத்தைக் கொண்டு செல்வதிலுள்ள சிக்கல்கள் தொடர்பில் அமைச்சர்  சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியுடன் சுதந்திரக் கட்சி இணையுமானால், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் என்று, ஜனாதிபதியுடன் கண்டியில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது, ஐ.தே.கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவீர கூறியிருந்தார்.

ஐ.தே.கட்சியிடம் தற்போது 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளபோதும், 130 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை தம்மால் காட்ட முடியும் எனவும், இதன்போது ஜனாதிபதியிடம் அவர் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்