அலுகோசு பதவிக்கு இருவர் நியமனம்

அலுகோசு பதவிக்கு இருவர் நியமனம் 0

🕔30.Jun 2019

அலுகோசு பதவிக்கு இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தமைக்கு இணங்க, அமெரிக்க பிரஜை உட்பட 100 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தெரிவு செய்யப்பட்ட 26 பேருக்கு நடத்தப்பட்ட பயிற்சி மற்றும் பரீட்சையில், அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களில் இருவர், குறித்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வெலிக்கட சிறைச்சாலையில்

மேலும்...
மதுஷுடன் தொடர்பிலிருந்த 07 அரசியல்வாதிகளின் பெயர் வெளியிடப்படும்: அமைச்சர் ராஜித

மதுஷுடன் தொடர்பிலிருந்த 07 அரசியல்வாதிகளின் பெயர் வெளியிடப்படும்: அமைச்சர் ராஜித 0

🕔30.Jun 2019

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மாகந்துர மதூஷுடன் தொடர்பிலிருந்த அரசியல்வாதிகள் 07 பேரின் பெயர்களை வெளியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேற்படி அரசியல்வாதிகள் குறித்து மதுஷ் தகவல் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உலகக் கிண்ண கிறிக்கட் போட்டிகளின் பின்னர், இந்த விவரங்கள் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டி, கதிர்காமத்துக்கு யாத்திரை

கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டி, கதிர்காமத்துக்கு யாத்திரை 0

🕔28.Jun 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என வேண்டி, கதிர்காமத் திருத்தலத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் தலைவர் கி. லிங்கேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல், கல்முனை உப

மேலும்...
அனைவரையும் அனுமதியுங்கள்: முஸ்லிம் வியாாரிகளுக்குத் தடை விதித்த வென்னப்புவ தவிசாளருக்கு, நீதிமன்றம் உத்தரவு

அனைவரையும் அனுமதியுங்கள்: முஸ்லிம் வியாாரிகளுக்குத் தடை விதித்த வென்னப்புவ தவிசாளருக்கு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔28.Jun 2019

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் சகல இனத்தவர்களும் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்குமாறு, மாரவில நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதித்து, வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளர் கடந்த 24ஆம் திகதியிட்டு தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கடிதமொன்றினை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
சஹ்ரானை நீங்கள் சந்தித்த படம் வெளியானதே: தெரிவுக் குழு முன்னிலையில் றிசாட்: சொன்ன பதில் என்ன?

சஹ்ரானை நீங்கள் சந்தித்த படம் வெளியானதே: தெரிவுக் குழு முன்னிலையில் றிசாட்: சொன்ன பதில் என்ன? 0

🕔28.Jun 2019

– ஆர். சிவராஜா – “வேற்று மதத்தினரை கொல்லவோ அல்லது தற்கொலைத் தாக்குதல் நடத்தவோ இஸ்லாம் கூறவில்லை. அவ்வறு கூறுகின்றவர்களை இஸ்லாத்தில் ஏற்க முடியாது. நான் ஐ.எஸ். அமைப்பை நிராகரிக்கிறேன். அந்த அமைப்பை ஒழிக்க அரசாங்கம் செயல்பட வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க

மேலும்...
அடுத்து வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது; நீதிமன்றில் உறுதி

அடுத்து வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது; நீதிமன்றில் உறுதி 0

🕔28.Jun 2019

சிறையிலுள்ள கைதிகள் எவருக்கும் இன்றைய தினத்தில் இருந்து எதிர்வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை எதுவும் நாட்டில் நிறைவேற்றப்பட மாட்டாது என, சிறைச்சாலைகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உறுதியளித்துள்ளது. மரண தண்டனையை அமுல்படுத்தாது இருக்க, இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று வெள்ளிழக்கிழமை அழைக்கப்பட்ட போதே

மேலும்...
மரண தண்டனையை எதிர்நோக்கி 458 பேர் உள்ளனர்: சிறைச்சாலைத் திணைக்களம்

மரண தண்டனையை எதிர்நோக்கி 458 பேர் உள்ளனர்: சிறைச்சாலைத் திணைக்களம் 0

🕔28.Jun 2019

இலங்கையில் தற்போது 458 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாக, சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1178 பேருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதிலும், அவர்களில் 720 பேர், தமது தண்டனைகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் 30 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களாவர். இவர்களில் 18 பேர் மரண

மேலும்...
டொக்டர் ஷாபி விவகாரம்: சிஐடி யினர் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்கிறார் ரத்ன தேரர்

டொக்டர் ஷாபி விவகாரம்: சிஐடி யினர் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்கிறார் ரத்ன தேரர் 0

🕔27.Jun 2019

குற்றப் புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) மீதான நம்பிக்கை ஒட்டுமொத்தமாக இல்லாமல் போய்விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். சி.ஐ.டியின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ். திசேரா என்பவர், டொக்டர் ஷாபி தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைத்த விளக்கங்களினாலேயே, ஒட்டுமொத்த சி.ஐ.டி மீதான நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளது என அவர் கூறியுள்ளார். குருணாகல் நீதிமன்றத்தில் டொக்டர்

மேலும்...
மில்ஹான் வழங்கிய தகவலின் அடிப்படையில், காத்தான்குடி – ஒல்லிக்குளத்தில் வெடிபொருட்கள் மீட்பு

மில்ஹான் வழங்கிய தகவலின் அடிப்படையில், காத்தான்குடி – ஒல்லிக்குளத்தில் வெடிபொருட்கள் மீட்பு 0

🕔27.Jun 2019

ஒரு தொகை வெடிபொருள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று வியாழக்கிழமை காத்தான்குடி ஒல்லிக்குளம் பகுதியில் கைப்பற்றியுள்ளனர். ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில், சஊதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வரும், அஹமட் மில்ஹான் என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்தப் பொருட்கள்

மேலும்...
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்தமை குறித்து வெட்கமடைகிறேன்: டலஸ்

முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்தமை குறித்து வெட்கமடைகிறேன்: டலஸ் 0

🕔27.Jun 2019

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் தொழிலில் ஈடுபடுவதற்கு, வென்னப்பு பிரதேச சபைத் தவிசாளர் தடை விதித்தமை தொடர்பில் தான் வெட்கமடைவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ உடனடியாக இது தொடர்பில் வினவியதாகவும் அவர் கூறியுள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை

மேலும்...
கல்முனை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சஹ்ரானின் மனைவி; மூடிய அறையில் விசாரணை

கல்முனை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சஹ்ரானின் மனைவி; மூடிய அறையில் விசாரணை 0

🕔26.Jun 2019

– பாறுக் ஷிஹான் – ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியும், சங்ரிலா தற்கொலைக் குண்டுதாரியுமான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28)  இன்று புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட ஷஹ்ரானின் மனைவியை, பொலிஸ் பரிசோதகர்  பஸீல் கல்முனை நீதிமன்ற

மேலும்...
நபர் ஒருவர் குறித்து மட்டுமே றிசாட் வினவினார்; அழுத்தம் கொடுக்கவில்லை: தெரிவுக்குழு முன், ராணுவத் தளபதி

நபர் ஒருவர் குறித்து மட்டுமே றிசாட் வினவினார்; அழுத்தம் கொடுக்கவில்லை: தெரிவுக்குழு முன், ராணுவத் தளபதி 0

🕔26.Jun 2019

ஈஸ்டர் தின தாக்குதலையடுத்து கைது​செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தனக்கு எவ்வித அழுத்தங்களையும் விடுக்கவில்லை என்று ராணுவத் தளபதி மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில், இன்று புதன்கிழமை அவர் சாட்சியமளிக்கும் போதெ, இதனைக் கூறினார். ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி இஷான்

மேலும்...
04 பேருக்கு மரண தண்டனையை அமுலாக்கும் ஆவணத்தில், ஜனாதிபதி கையெழுத்து

04 பேருக்கு மரண தண்டனையை அமுலாக்கும் ஆவணத்தில், ஜனாதிபதி கையெழுத்து 0

🕔26.Jun 2019

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில், 04 பேருக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் ஏற்கனவே தான் கையொப்பம் இட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக தலைவர்களுடனான சந்திப்பில் இன்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். மேற்படி நால்வருக்குமான மரண தண்டனை விரைவில்

மேலும்...
ராணுவ சீருடையில் வந்தோர் பொதுமக்கள் மீது தாக்குதல்; சட்டத்தரணி அன்சில், அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு

ராணுவ சீருடையில் வந்தோர் பொதுமக்கள் மீது தாக்குதல்; சட்டத்தரணி அன்சில், அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு 0

🕔25.Jun 2019

– அஹமட் – அம்பாறை மாவட்டம் – பாலமுனை கடற்கரை வீதியில் பயணித்த பொதுமக்களை, நேற்று திங்கட்கிழமை ராணுவ உடை தரித்த சிலர் கடுமையாகி தாக்கி காயப்படுத்தியதாக தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில், இன்று செவ்வாய்கிழமை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொதுமக்கள் தாக்கப்படும் காட்சிகள், அங்கு

மேலும்...
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்த, பிரதேச சபைத் தவிசாளருக்கு, நீதிமன்றம் அழைப்பாணை

முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்த, பிரதேச சபைத் தவிசாளருக்கு, நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔25.Jun 2019

– அஹமட் – முஸ்லிம் வியாபாரிகளுக்கு தங்கொட்டுவ சந்தையில் தொழில் செய்வதற்குத் தடைவிதித்த வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. தடை விதித்தமைக்கான விளக்கத்தையும் அவர் நீதிமன்றில் வழங்க வேண்டுமெனவும் பணிக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ பிரதேச சபையின் தவிசாளர் கே.வி. சுசந்த பெரேரா, நேற்று 24ஆம் திகதியிட்டு, தங்கொட்டுவ பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்