மில்ஹான் வழங்கிய தகவலின் அடிப்படையில், காத்தான்குடி – ஒல்லிக்குளத்தில் வெடிபொருட்கள் மீட்பு
ஒரு தொகை வெடிபொருள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று வியாழக்கிழமை காத்தான்குடி ஒல்லிக்குளம் பகுதியில் கைப்பற்றியுள்ளனர்.
ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில், சஊதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வரும், அஹமட் மில்ஹான் என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
300 ஜெலக்னைட் குச்சிகள், 1000 டிடோனேடர்கள், திரவ நிலையிலுள்ள 08 லீட்டர் ஜெலக்னைட், டிடோனேடர் வயர்கள் மற்றும் ரி56 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 475 ரவைகள் ஆகியவை இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை அனைத்தும், பல்வேறு இடங்களில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன.