முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்தமை குறித்து வெட்கமடைகிறேன்: டலஸ்

🕔 June 27, 2019

ங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் தொழிலில் ஈடுபடுவதற்கு, வென்னப்பு பிரதேச சபைத் தவிசாளர் தடை விதித்தமை தொடர்பில் தான் வெட்கமடைவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ உடனடியாக இது தொடர்பில் வினவியதாகவும் அவர் கூறியுள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள சபையினால், முஸ்லிம் வியாபாரிகள் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடை விதித்து கடிதம் வௌியிடப்பட்டமை தொடர்பில் தாம் வெட்கமடைவதாக அவர் கூறினார். 

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் தொழிலில் ஈடுபடுவதற்கு, வென்னப்புவ பிரதேச சபை தவிசாளர் தடை விதிப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்த, பிரதேச சபைத் தவிசாளருக்கு, நீதிமன்றம் அழைப்பாணை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்