கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டி, கதிர்காமத்துக்கு யாத்திரை

🕔 June 28, 2019

பாறுக் ஷிஹான்

ல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என வேண்டி, கதிர்காமத் திருத்தலத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் தலைவர் கி. லிங்கேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல், கல்முனை உப பிரதேச செயலகம் முன்பாக, மேற்படி யாத்திரை ஆரம்பமானது.

மனிதனால் தீர்த்துவைக்க முடியாத விடயத்தை கடவுள் தீர்த்து வைக்க வேண்டும் என்ற உள்கருத்தை வலியுறுத்தி இப் பாதை யாத்திரை முன்னெடுப்படுவதாக யாத்திரிகர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் யாத்திரிகர்களை வழியனுப்பும் வைபவத்தில் கலந்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்