அனைவரையும் அனுமதியுங்கள்: முஸ்லிம் வியாாரிகளுக்குத் தடை விதித்த வென்னப்புவ தவிசாளருக்கு, நீதிமன்றம் உத்தரவு

🕔 June 28, 2019

ங்கொட்டுவ வாராந்த சந்தையில் சகல இனத்தவர்களும் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்குமாறு, மாரவில நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதித்து, வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளர் கடந்த 24ஆம் திகதியிட்டு தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கடிதமொன்றினை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்தே, மாரவில நீதவான் நீதிமன்றம் மேற்படி உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது.

தொடர்பான செய்தி: முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்த, பிரதேச சபைத் தவிசாளருக்கு, நீதிமன்றம் அழைப்பாணை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்