அலுகோசு பதவிக்கு இருவர் நியமனம்

🕔 June 30, 2019

லுகோசு பதவிக்கு இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தமைக்கு இணங்க, அமெரிக்க பிரஜை உட்பட 100 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் தெரிவு செய்யப்பட்ட 26 பேருக்கு நடத்தப்பட்ட பயிற்சி மற்றும் பரீட்சையில், அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களில் இருவர், குறித்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் வெலிக்கட சிறைச்சாலையில் பாணியாற்றுவர் என்றும், இவர்களுக்கு செய்முறை பயிற்சி வழங்கப்படும் எனவும் சிறைச்சாலைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்