மதுஷுடன் தொடர்பிலிருந்த 07 அரசியல்வாதிகளின் பெயர் வெளியிடப்படும்: அமைச்சர் ராஜித
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மாகந்துர மதூஷுடன் தொடர்பிலிருந்த அரசியல்வாதிகள் 07 பேரின் பெயர்களை வெளியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேற்படி அரசியல்வாதிகள் குறித்து மதுஷ் தகவல் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலகக் கிண்ண கிறிக்கட் போட்டிகளின் பின்னர், இந்த விவரங்கள் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அரசியல்வாதிகளுள் மூவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களென்றும் ஏனைய நால்வரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களென்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பயாகல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.