Back to homepage

Tag "சாய்ந்தமருது"

சாய்ந்தமருது விடயத்தில் நான் துரோகமிழைக்கவில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

சாய்ந்தமருது விடயத்தில் நான் துரோகமிழைக்கவில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔19.Jan 2018

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்துக்கு பிரதேச சபை ஒன்றினை வழங்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என்று, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். எவ்வாறாயினும், அம்பாறை மாவட்டத்தில் அரசியல் செய்வோர் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றியிராது விட்டால், சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை ஏற்கனவே கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறினார். சாய்ந்தமருது

மேலும்...
நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை 0

🕔17.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார்- மதமும் அரசியலும் மனிதனை மிக இலகுவாகவும், கடுமையாகவும் உணர்ச்சி வசப்படுத்தி விடுபவை. இந்த இரண்டின் பெயரில்தான் உலகில் அதிக குழப்பங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன. அரசியல் என்பது நாகரிகமடைந்த ஒரு சமூகத்தின் அடையாளமாகும். மதங்கள் என்பவை, மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவானவையாகும். ஆனால், இந்த இரண்டின் பெயராலும் உணச்சியின் உச்சத்துக்குச் சென்று,

மேலும்...
சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம்

சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம் 0

🕔16.Jan 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், சாய்ந்தமருது மக்களுக்குப் பயந்து சம்மாந்துறை ஊடாக மருதமுனைக்கு சென்ற சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு பாலமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், மருதமுனையில் ஏற்பாடாகியிருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார். இதனை அறிந்து

மேலும்...
பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டதால், பல உத்தரவாதங்களை வழங்க நேர்ந்தது: சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் ஹக்கீம் உரை

பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டதால், பல உத்தரவாதங்களை வழங்க நேர்ந்தது: சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் ஹக்கீம் உரை 0

🕔15.Jan 2018

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை, நாங்கள் இதயசுத்தியுடன் செய்துகொடுக்க முற்படுகின்றபோது, மாற்றுக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு எமக்கு வேலி கட்டுகின்றனர். எல்லோரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரேநாளில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக

மேலும்...
ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, நூற்றுக் கணக்கானோர் சுற்றி வளைத்து தாக்குதல்;  சாய்ந்தமருதில் சம்பவம்

ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, நூற்றுக் கணக்கானோர் சுற்றி வளைத்து தாக்குதல்; சாய்ந்தமருதில் சம்பவம் 0

🕔15.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது தனது வாகனம் சேதமடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புதிது செய்தித்தளத்துக்கு தெரிவித்தார். பாலமுனையில் நடைபெற்ற மு.காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட  ஹுனைஸ்

மேலும்...
மு.காங்கிரஸின் சாய்ந்தமருது கூட்டம் மீது தாக்குதல்; மின் விளக்குகளை அணைத்து மக்கள் எதிர்ப்பு

மு.காங்கிரஸின் சாய்ந்தமருது கூட்டம் மீது தாக்குதல்; மின் விளக்குகளை அணைத்து மக்கள் எதிர்ப்பு 0

🕔15.Jan 2018

– முன்ஸிப் அஹமட்,  நியாஸ் (சாய்ந்தமருது) – சாய்ந்தமருது பிரதேசத்தில் மு.காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற போது கைகலப்புகள் இடம்பெற்றதோடு, கடுமையான கல் வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.குறித்த கூட்டம் நடைபெற்ற போது, அங்கு திரண்ட பெருமளவானோர், அந்தக் கூட்டத்துக்கு எதிராக கூச்சலிட்டு தமது எதிர்ப்பினை வெளியிட்ட நிலையில், கூட்டம்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் விசேட நம்பிக்கையாளர் சபையிலிருந்து, பொறியியலாளர் சாஹிர் ராஜிநாமா

சாய்ந்தமருது பள்ளிவாசல் விசேட நம்பிக்கையாளர் சபையிலிருந்து, பொறியியலாளர் சாஹிர் ராஜிநாமா 0

🕔11.Jan 2018

– மப்றூக் –சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கான விசேட நம்பிக்கையாளர் சபைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட நான்கு பேரில் ஒருவர் இன்று வியாழக்கிழமை தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்டடத் திணைக்களத்தின் கல்முனை அலுவலக பிரதம பொறியியலாளரும், சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவருமான ஏ.எம். சாஹிர் என்பவரே இவ்வாறு தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

மேலும்...
வக்பு சபை என்பது, ஓர் அரசியல் முகவரகம்; சாய்ந்தமருது விவகாரம் நிரூபித்துள்ளது: ஜே.வி.பி. வேட்பாளர் முஜீப் இப்றாகிம்

வக்பு சபை என்பது, ஓர் அரசியல் முகவரகம்; சாய்ந்தமருது விவகாரம் நிரூபித்துள்ளது: ஜே.வி.பி. வேட்பாளர் முஜீப் இப்றாகிம் 0

🕔10.Jan 2018

இலங்கையில் வக்பு சபை என்பது ஓர் அரசியல் முகவர் என்பதை, சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக கலைப்பு சந்தேகமற நிரூபித்துள்ளதாக, காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக போட்டியிடும் முஜீப் இப்றாகிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; அரசாங்கங்கள் மாறுகிற போது, வக்பு சபை அங்கத்தவர்களும் மாறுகிறார்கள். அதாவது ஆளுந்தரப்பு அரசியல்காரர்களின் சிபாரிசின்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை கலைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்பு; பின்னணியில் ஹக்கீம்: அம்பலப்படுத்துகிறார் பசீர்

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை கலைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்பு; பின்னணியில் ஹக்கீம்: அம்பலப்படுத்துகிறார் பசீர் 0

🕔7.Jan 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தை கலைத்து விடுமாறு, முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்கிணங்க, அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர், தேர்தல்கள்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை, தேர்தல் ஆணையாளர் கலைக்கப் போகிறார்: ஹக்கீம் தெரிவிப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை, தேர்தல் ஆணையாளர் கலைக்கப் போகிறார்: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔5.Jan 2018

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தை தேர்தல் ஆணையார் அப்படியே கலைக்கப் போகின்றார் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சாய்ந்தமருதில் அவர்கள் தோண்டிய குழிக்குள் அவர்களாகவே விழுந்துள்ளார்கள். யாரும் வரக்கூடாது என்று வன்முறை செய்தார்கள். ஆனால், இப்போது சாய்ந்தமருதில் தாரளமாக கூட்டம் நடத்தலாம். தேர்தல்கள் ஆணையாளர் இதுதொடர்பில் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார் எனவும், அவர் கூறியுள்ளார்.மேலும்,

மேலும்...
யாருக்கும் முட்டுக் கொடுக்க மாட்டோம்: சாய்ந்தமருது சுயேட்சை வேட்பாளர் அஸீம் உறுதி

யாருக்கும் முட்டுக் கொடுக்க மாட்டோம்: சாய்ந்தமருது சுயேட்சை வேட்பாளர் அஸீம் உறுதி 0

🕔2.Jan 2018

– எம்.வை. அமீர்- சாய்ந்தமருது மக்களின் மூன்று தசாப்தகால கோரிக்கையான தனி உள்ளுராட்சி சபையினை மேலும் வலியுறுத்துவதற்கான சர்வஜன வாக்கெடுப்பாகவே, நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை தாம் பார்ப்பதாக, கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், தோடம்பழச் சின்ன சுயேட்சைக் குழுவில் சாய்ந்தமருது 21 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் தொழிலதிபர் ஏ.ஆர்.எம்.  அஸீம் தெரிவித்தார். குறித்த 21 ஆம் வட்டாரத்தில் சுயேட்சைக் குழுவுக்கான தேர்தல் அலுவலகம்

மேலும்...
தேவை ஒரு பூக்களம்

தேவை ஒரு பூக்களம் 0

🕔26.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமைக்காக, 1994ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வியாபார நிலையம் அடித்து உடைத்து, தீ வைக்கப்பட்டது. தேர்தல் முடிவொன்றை அடுத்து கிளர்ந்தெழுந்த கட்சித் தொண்டர்கள், அந்த வன்செயலில் ஈடுபட்டார்கள். தனக்கு விருப்பமான அரசியல் கட்சியை அந்த வியாபார நிலையத்தின் உரிமையாளர்

மேலும்...
கல்முனை நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்: முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாத்

கல்முனை நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்: முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாத் 0

🕔26.Dec 2017

– ரி.தர்மேந்திரன் – கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் கல்முனை நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்பதை நிரூபிக்கும். அப்படி கல்முனை நான்காக பிரிக்கப்படுகின்றபோது தனியான பிரதேச சபை சாய்ந்தமருதுக்கு கிடைக்கும் என்று, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத் தெரிவித்தார். பல்லாண்டு காலமாக வினை திறன் அற்றவர்களிடம் சிக்கி சீரழிந்து வீழ்ச்சி அடைந்திருக்கும்

மேலும்...
ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் பாரிய எதிர்ப்பு; மக்களின் ஆவேசம் கண்டு நிகழ்வுகள் ரத்து

ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் பாரிய எதிர்ப்பு; மக்களின் ஆவேசம் கண்டு நிகழ்வுகள் ரத்து 0

🕔24.Dec 2017

– எம்.ஐ. சர்ஜூன் (சாய்ந்தமருது) –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப்  ஹக்கீம், சாய்ந்தமருதில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொள்ளவிருந்த இரு நிகழ்வுகள், பொதுமக்களின் பாரிய எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்றைய தினம் 02 மணியளவில் சாய்ந்தமருதில் நடைபெறும் தோணா அபிவிருத்தியை பார்வையிடுவதுடன், கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச்

மேலும்...
மு.கா. வேட்பாளர் பிர்தௌஸின் சாய்ந்தமருது வீட்டின் மீது தாக்குதல்; பெருங் கூட்டமாக வந்தோர் கை வரிசை

மு.கா. வேட்பாளர் பிர்தௌஸின் சாய்ந்தமருது வீட்டின் மீது தாக்குதல்; பெருங் கூட்டமாக வந்தோர் கை வரிசை 0

🕔24.Dec 2017

– முன்ஸிப் –கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். பிர்தௌஸின் வீடு மீது, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெருங் கூட்டமாக வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதால், அந்தப் பகுதி சில மணி நேரம் பாரிய படத்துக்குள்ளானது. இதன்போது பிர்தௌஸின் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வீட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்