ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, நூற்றுக் கணக்கானோர் சுற்றி வளைத்து தாக்குதல்; சாய்ந்தமருதில் சம்பவம்

🕔 January 15, 2018

– முன்ஸிப் அஹமட் –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது தனது வாகனம் சேதமடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புதிது செய்தித்தளத்துக்கு தெரிவித்தார்.

பாலமுனையில் நடைபெற்ற மு.காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட  ஹுனைஸ் பாறூக், மருதமுனையில் ஏற்பாடாகியிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருது பிரதான வீதியில் திரண்டிருந்த நூற்றுக் கணக்கானோர், தனது வாகனத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாக,  ஹுனைஸ் பாறுக் மேலும் கூறினார்.

தன்னை அடையாளம் கண்ட பின்னரே, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தனது சாரதியின் சாதுரியத்தின் காரணமாக, தான் ஆபத்தின்றி தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்