தேர்தலில் போட்டியிடும் சில ஆசிரியர்களின், சம்பளமற்ற விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு

🕔 January 15, 2018

ள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடும் சில ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியாது என்று, கிழக்கு மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பிய கடிதத்துக்கு அமைவாக, இந்த ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியாது என்று, மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதிகள், உரிய ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நடைமுறையிலுள்ள சம்பளத் திட்டத்தின் படி, 18,940 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைப் பெறும் அரச ஊழியர்கள், உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளை, 18,940 ரூபாய் அடிப்படைச் சம்பளத்துக்கு உட்பட்ட ஒருவர், தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தாலும், அவர் சம்பளமற்ற விடுமுறையைப் பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Comments