பெரிய முட்டையிடும் அதிசயக் கோழி; அதுவும் நாளொன்றுக்கு இரண்டு தடவை

🕔 January 15, 2018

– க. கிஷாந்தன் –

கோழியொன்று 180 கிராம் நிறை கொண்ட பெரிய முட்டைகளை இட்டு வருவதாக ஹட்டன் பிரதேச பண்ணை உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

ஹட்டன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, இவ்வாறு கோழியொன்று முட்டையிட்டு வருவதாக பண்ணை உரிமையாளர் கூறினார்.

வழமையாக கோழிகள் சுமார் 06 தொடக்கம் 07 கிராம் வரையிலான நிறை கொண்ட முட்டைகளை மாத்திரம் இட்டு வந்துள்ளதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரட்டை கோதுடைய பெரிய முட்டையொன்றினை குறித்த கோழி இட்டுள்ளதாகவும் பண்ணை உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுமார் 180 கிராம்  நிறை கொண்ட அதிசயத்தக்க பாரிய முட்டை ஒன்றினை அந்தக் கோழி இட்டுள்ளது.

சாதாரணமாக கோழி ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை முட்டை இடுவதாகவும், ஆனால் இந்தக் கோழி, நாளொன்றுக்கு இரண்டு தடவை பெரிய முட்டைகளை இட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்