இந்த வருடத்தில் சிக்கிய ஹெரோயின் மட்டும் 430 கிலோ; 37,304 பேர் கைது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

இந்த வருடத்தில் சிக்கிய ஹெரோயின் மட்டும் 430 கிலோ; 37,304 பேர் கைது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் 0

🕔6.Dec 2018

இலங்கையில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், 430 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவற்றின் பெறுமதி 5166 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி ஹெரோயின் போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 37 ஆயிரத்து 304 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும்

மேலும்...
19ஆவது திருத்தத்தை ஐ.தே.கட்சி தனக்கு சாதகமாக உருவாக்கியது: ஜோன் செனவிரத்ன குற்றச்சாட்டு

19ஆவது திருத்தத்தை ஐ.தே.கட்சி தனக்கு சாதகமாக உருவாக்கியது: ஜோன் செனவிரத்ன குற்றச்சாட்டு 0

🕔6.Dec 2018

மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய குடும்பத்தினரும் அரசியலில்  பிரவேசிக்க கூடாது என்பதற்காகவும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதற்காகவுமே, அரசியலமைப்பில் 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதாக, நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். இதற்காகவே, 19ஆவது திருத்தம் மிகவும் விரைவாகவும் சூட்சுமமாகவும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில்

மேலும்...
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றோரில் 247 பேர் மரணம்: இந்த வருடத்து தகவல்

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றோரில் 247 பேர் மரணம்: இந்த வருடத்து தகவல் 0

🕔6.Dec 2018

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றவர்களில், இந்த வருடத்தின் இதுவரை காலப் பகுதியில் மட்டும் 247 பேர், பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர் என்று, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 50 பெண்கள் மற்றும் 145 ஆண்கள் இயற்கை மரணம் அடைந்ததாகவும், 06 பெண்களும் 25 ஆண்களும் தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

மேலும்...
பாபர் மசூதியின் கோபுரத்தை முதலில் ஏறி உடைத்த பல்பீர் சிங்; என்ன செய்கிறார் இப்போது

பாபர் மசூதியின் கோபுரத்தை முதலில் ஏறி உடைத்த பல்பீர் சிங்; என்ன செய்கிறார் இப்போது 0

🕔6.Dec 2018

(பாபர் மசூதி உடைக்கப்பட்டு இன்றுடன் 26 வருடங்களாகின்றன) இந்தியாவே அதிர்ந்த சம்பவம் அது. எது நடக்கக் கூடாது என்று இந்திய மக்கள் கருதினார்களோ, கடைசியில் அது நடந்தேவிட்டது. மத நல்லிணக்கம்  இந்தியாவிலிருந்து மறைந்த நாள். 1992- ம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி, அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டது.மசூதியை உடைக்க லட்சக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் முகாமிட்டிருந்தனர்.

மேலும்...
ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம்: திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்டார் நாமல் குமார

ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம்: திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்டார் நாமல் குமார 0

🕔6.Dec 2018

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது பற்றியும், அவர்கள் வெளியிட்ட தகவல்கள் குறித்தும், நாமல் குமார புதிய பல தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பதவி வெற்றிடமானால், அப் பதவிக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் ஒருவரை முன்மொழியலாம் என, அரசியலமைப்பில் இருக்கிறதாம் என்று, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர், தன்னுடன்

மேலும்...
பாபர் மசூதி: இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி: நேரில் படம் பிடித்தவர் தரும் புதிய தகவல்கள்

பாபர் மசூதி: இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி: நேரில் படம் பிடித்தவர் தரும் புதிய தகவல்கள் 0

🕔6.Dec 2018

(இதேபோன்றதொரு டிசம்பர் – 06ஆம் திகதிதான், பாபர் மசூதி உடைக்கப்பட்டது) டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நடைபெறும் ஒரு நாள் முன்பாக,

மேலும்...
இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் சிக்கியது: பேருவளை கடலில் சம்பவம்

இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் சிக்கியது: பேருவளை கடலில் சம்பவம் 0

🕔6.Dec 2018

இரண்டு சந்தேக நபர்களுடன் 231 கிலோ 54 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை பேருவளை – பலப்பிட்டிய கடலில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று புதன்கிழமை இரவு கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 277 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் இது என பொலிஸ் ஊடகப்

மேலும்...
ரணிலுக்கு முடியாது: அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

ரணிலுக்கு முடியாது: அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔5.Dec 2018

நாட்டின் சட்டம், ஜனநாயகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணலில் விக்ரமசிங்க, முதலில் அவருடைய கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரச அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது, இந்தக் கருத்தினை அவர் வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இல்லாத

மேலும்...
ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாது

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாது 0

🕔5.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானதெனத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேற்படி வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமை 07 நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்ட மா அதிபர், இந்த விடயத்தை நீதிமன்றில்

மேலும்...
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதே, இறுதி வழியாகும்: மங்கள

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதே, இறுதி வழியாகும்: மங்கள 0

🕔5.Dec 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, நாடாளுமன்றில் குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவருவதே இறுதி வழியாக அமையும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடர்பில், தனது விமர்சனத்தை ‘ட்விட்டரில்’ வெளியிட்டுள்ள

மேலும்...
பொலிஸ் பரிசோதகர் றஹ்மான் காலமானார்: நல்லடக்கம் மருதமுனையில்

பொலிஸ் பரிசோதகர் றஹ்மான் காலமானார்: நல்லடக்கம் மருதமுனையில் 0

🕔5.Dec 2018

– யூ கே. காலித்தீன் –பொலிஸ் பரிசோதகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இஸட்.ஏ.எச். றஹ்மான் (வயது 54)  இன்று புதன்கிழமை காலமானார். அதிகாலை ஓரு மணியளவில்  திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.மருதமுனையை சொந்த இடமாகக் கொண்ட இவர், நான்கு

மேலும்...
மஹிந்தவை ‘பிரதமர்’ எனக் குறிப்பிட்டதன் மூலம், நீதிமன்றை அவமதித்ததா ‘தி ஐலன்ட்’?

மஹிந்தவை ‘பிரதமர்’ எனக் குறிப்பிட்டதன் மூலம், நீதிமன்றை அவமதித்ததா ‘தி ஐலன்ட்’? 0

🕔5.Dec 2018

மஹிந்த ராஜபக்ஷவை ‘பிரதமர்’ எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிடடதன் மூலம் ‘தி ஐலன்ட்’ பத்திரிகை, நீதிமன்ற அவமதிப்பினை மேற்கொள்கிறா என்கிற கேள்வியுடன், ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் (03ஆம் திகதி) மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஐக்கிய

மேலும்...
பேராதனை பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தாக்குதல்: மாணவியொருவருக்கு விளக்க மறியல்

பேராதனை பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தாக்குதல்: மாணவியொருவருக்கு விளக்க மறியல் 0

🕔5.Dec 2018

பேராதனைப் பல்கலைக்கழக மாணவி ஒருவரை நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியவில் வைக்குமாறு, கண்டி நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மூன்று மாணவிகள் மீது, மேற்படி சிரேஷ்ட மாணவி தாக்குதல் நடத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்தே, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சங்கமித்தை பெண்கள் விடுதியில் மேற்படி தாக்குதல் சம்பவம்

மேலும்...
செல்போன் சர்ச்சை, ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்: 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை?

செல்போன் சர்ச்சை, ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்: 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை? 0

🕔4.Dec 2018

இயக்குநர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த்தின் 2.0 படத்தில் பேசப்படுவது அறிவியல்தானா, அதில் எதெல்லாம் உண்மை? கொஞ்சம் விரிவாக அலசுவோம். “உங்கள் முன், அறிவியல் என்ற பெயரில் திணிக்கப்படும் போலி அறிவியலை (Pseudoscience) பகுப்பாய்வுக்கு உட்படுத்துங்கள். அதில் நமக்கு மகிழ்ச்சி அல்லது நிம்மதி தரக்கூடிய ஏதோவொன்று திணிக்கப்பட்டிருப்பதை உணர்வீர்கள். எனக்குப் புரியாதது இதுதான். ஒரு விஷயம் நமக்கு

மேலும்...
இறக்காமம் காபட் வீதி வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு

இறக்காமம் காபட் வீதி வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு 0

🕔4.Dec 2018

– அஹமட் – இறக்காமம் பிரதான வீதியை, காபட் வீதியாக அமைக்கும் செயற்பாடுகள் மிக நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வீதி வேலை முடிவுறாமைக்கு எதிராக தமண பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அமைப்பாளர் கே.எல். சமீம், இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்