பேராதனை பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தாக்குதல்: மாணவியொருவருக்கு விளக்க மறியல்

🕔 December 5, 2018

பேராதனைப் பல்கலைக்கழக மாணவி ஒருவரை நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியவில் வைக்குமாறு, கண்டி நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மூன்று மாணவிகள் மீது, மேற்படி சிரேஷ்ட மாணவி தாக்குதல் நடத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்தே, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சங்கமித்தை பெண்கள் விடுதியில் மேற்படி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

குறித்த விடுதியின் குளியலறைக்கு அருகில் மூன்று மாணவிகளை, கடந்த 23ஆம் திகதி, மேற்படி சிரேஷ்ட மாணவி தாக்கியதாக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் பல்கலைக்கழக நிருவாகமும் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்