இந்த வருடத்தில் சிக்கிய ஹெரோயின் மட்டும் 430 கிலோ; 37,304 பேர் கைது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

🕔 December 6, 2018

லங்கையில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், 430 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவற்றின் பெறுமதி 5166 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி ஹெரோயின் போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 37 ஆயிரத்து 304 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் சிக்கியது: பேருவளை கடலில் சம்பவம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்