தலைப்புச் செய்திகள்

வேன் – பஸ் மோதியதில் மூவர் மரணம்: வரகாபொல பிரதேசத்தில் சம்பவம்

வரகாபொல – மஹேன பகுதியில் கொழும்பு – கண்டி வீதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதிக்கொண்டதில், பெண் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகவும், நால்வர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நால்வரும் தற்போது வரகாபொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற வேன் ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, ​​எதிர்த் திசையில் (கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி) வந்த பஸ்ஸுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். வேன் சாரதி காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.