
கலால் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற ஆணையாளர் ஒருவரையும் கலால் திணைக்கள கோப்ரல் ஒருவரையும் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கைகள் நேற்று (05) மேற்கொள்ளப்பட்டதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், ஓய்வுபெற்ற கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் சன்ன வீரக்கொடி மற்றும் மாத்தறை கலால் நிலையத்தில் பணியாற்றும் கலால் திணைக்கள கோப்ரல் சம்பத் ரணசிங்க ஆகியோர் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற கலால் திணைக்கள பிரதி ஆணையாளர், தனது மேற்பார்வையின் கீழ் இருந்த, சட்டப்பூர்வ உரிமம் பெற்ற நிறுவனம் ஒன்றின் கணக்குகளிலிருந்து வழங்கப்பட்ட காசோலைகளை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் களுத்துறை கலால் அத்தியட்சகராகவும், அலுத்கமவில் கலால் அத்தியட்சகராகவும் (மதுபான ஆலைகள் பிரிவு – Distilleries) பொறுப்பு வகித்த காலத்திலேயே இந்தக் குற்றச்சாட்டிற்குரிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
குறித்த கலால் திணைக்கள சார்ஜென்ட், அந்த நிறுவனத்தின் மதுபான ஆலையில் பணியாற்றும் அதிகாரியாக இருந்தபோதிலும், அத்தகைய காசோலைகளைப் பெறுவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலையில், அவற்றை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.



