தலைப்புச் செய்திகள்

ரகித ராஜபக்ஷ உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரன அமைப்பாளர் சரித் அபேசிங்க, மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரை, ஜூலை 28ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம இன்று (17) உத்தரவிட்டார்.

பாதாள உலகப் பிரமுகர் ‘ஹரக் கட்டா’வின் மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபாயை லஞ்சமாகக் பெற்றதாகவ கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், இந்த மூவரும் ஜூன் 25 அன்று கைது செய்யப்பட்டனர்.

பிணை மனுக்கள் ஜூலை 28 அன்று பரிசீலிக்கப்படும் என்று நீதவான் தெரிவித்தார்.