
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலபே, தலஹேனாவில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாபொலிஸ் மா அதிபர் முல்லேரியாவ மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஏஎஸ்பி வூட்லர் கூறினார்.
மேலும், மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை மற்றும் விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இந்தச் சம்பவம் குறித்து வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுக்கள், மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.


