
– ஷனா –
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தியாகராஜா ஜெயகிருஷ்ணன் என்பவர், இன்று (16) காலை மருதமுனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தார்.
மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்டிய கல்முனை- மட்டக்களப்பு பிரதான வீதியில் இந்த விபத்து நடந்தது.
வாழைச்சேனையில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் வண்டியும், கல்முனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 36 வயதுடைய தியாகராஜா ஜெயகிருஷ்ணன் என்பவரே உயிரிழந்தார்.
இவர், மட்டக்களப்பு – நொச்சி முனையை சேர்ந்தவர் என்றும் தற்போது பாண்டிருப்பில் திருமணம் செய்து வசித்து வந்தார்.
அலுவலக கடமைக்கு செல்லும் போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது .
மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


