தலைப்புச் செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டு விட்டு நேற்று தப்பியவர், சிவில் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து, மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டு விட்டு தப்பிச்சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை (15) கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில், ஒரு பொலிஸ் அதிகாரியுடன் சண்டையிட்டு அவரின் பணித் துப்பாக்கியைப் பறித்து, அதைக் கொண்டு மற்றொரு பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு, பின்னர் ஒரு மோட்டார் பைக்-இல் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபர், முன்னாள் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

நேற்று இரவு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. 

சந்தேக நபரைப் பிடிப்பதற்காகப் பல பொலிஸ் குழுக்கள், விஷ் யூ ட நடவடிக்கை ஒன்றை தொடங்கின.

நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், திவுலபிட்டிய பகுதியில் அவரைக் கைது செய்தனர்.

அப்போது அவரிடமிருந்து 31 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. 

மேலும், பொலிஸ் உத்தியோகத்தருக்கு சொந்தமான திருடப்பட்ட துப்பாக்கியையும், சந்தேக நபரால் திருடப்பட்ட மோட்டார் பைக்-ஐயும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், திவுலபிட்டியவைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணையில், அவர் இதற்கு முன்னர் 2008 முதல் 2010 வரை கட்டுநாயக்க பாதுகாப்புப் பிரிவில், சிவில் பாதுகாப்புப் படையில் பணியாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர், கொழும்பு வைத்தியசாலையிலும் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தி யோகத்தர் மினுவாங்கொட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர் என நம்பப்படும் மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்காக, பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.